மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜோதிகா!
ADDED : 542 days ago
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆரம்ப கால கட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். கடைசியாக இருவரும் இணைந்து சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்து பின்னர் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என தங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக ஜோதிகா கதாநாயகி மற்றும் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இப்போது பல வருடங்களுக்கு பிறகு சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை ‛பெங்களூரு டேஸ்' இயக்குனர் அஞ்சலி மேனன் மற்றும் சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா ஹமிம் என இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.