கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா?
ADDED : 545 days ago
தென்னிந்திய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இதையடுத்து தொடர்ந்து ஹிந்தியில் நடிப்பதற்கும் அவர் முயற்சி எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் சோசியல் மீடியாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த ஒரு செய்தி வைரலாகிறது.
கடந்த சில ஆரண்டுகளாக கேரளாவை சேர்ந்த ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், தற்போது கீர்த்தி சுரேஷ் 30 வயதை எட்டி உள்ளதால் திருமணம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனபோதிலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. கீர்த்தி சுரேஷ் குறித்து ஏற்கனவே சிலமுறை இதுபோன்று திருமணம் செய்திகள் வெளியாகி இருப்பதால் இதுகுறித்து அவரே விளக்கம் கொடுக்கும்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும்.