3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்
ADDED : 594 days ago
சசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதையடுத்து முண்டாசுப்பட்டி, ராட்சசன், லால் சலாம் என பல படங்களில் நடித்தவர், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தங்களது திருமணம் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று அவர்கள் திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியுடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், எங்களுடைய நட்பு 7 வருடங்கள் கொண்டது. இன்று 3வது திருமண நாளை கொண்டாடி வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.