ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா!
ADDED : 528 days ago
அன்னபூரணி படத்திற்கு பிறகு டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் படத்தில் நடித்த நயன்தாரா அதன் பிறகு ஹிந்தியில் புதிய படங்களில் கமிட்டாகவில்லை என்ற போதும் சில தினங்களுக்கு முன்பு பாலிவுட்டில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஹாலிவுட் ஹீரோயின்களை போன்று படுகவர்ச்சியான ஒரு கருப்பு நிற உடை அணிந்து கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நயன்தாரா. அதே காஸ்ட்டியூமில் தான் ஒரு போட்டோசூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.