விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்!
ADDED : 531 days ago
தற்போது 'கோட்' படத்தில் நடித்து வரும் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார். இந்நிலையில் அவரது கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
அதோடு இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்களாம். இதற்கு முன்பு விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்த சமந்தாவும், பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்த கீர்த்தி சுரேசும் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.