எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா
ADDED : 605 days ago
ஹிந்தியில் சைத்தான் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தற்போது ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வந்த ஜோதிகா, தற்போது எவரெஸ்ட் மலை சிகரத்திற்கு டிரக்கிங் சென்றுள்ளார். அது குறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எவரெஸ்ட் சிகரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று அடைவது மற்றும் மின்சார வசதி இல்லாத இடங்களில் தங்கி இருப்பது, சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவது, பனிமழையில் நனைவது, உயரமான இடத்தில் அமைந்திருக்கும் ஹோட்டலில் உணவு சாப்பிடுவது உள்ளிட்ட காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.