ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது
ADDED : 530 days ago
பாலா இயக்கி உள்ள வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ள அருண் விஜய், அடுத்து நடிக்கும் 36 வது படம் ரெட்ட தல. திருக்குமரன் இயக்கும் இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதனை தொடர்ந்து படத்தின் தலைப்பு அறிமுக விழா கடந்தவாரம் நடந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இன்று(ஏப்., 29) முதல் தொடங்குகிறது. இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அருண் விஜய், ரெட்ட தல படத்தின் ஒரு போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறார்.