'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய்
ADDED : 521 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கோட்'. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, ரஷ்யா ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் விஜய். விமானநிலையித்தில் அவர் சென்ற வீடியோக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
'தி கோட்' படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகளும் அதிகம் இடம் பெறும் எனத் தெரிகிறது. படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாகவும் விஜய் அமெரிக்க சென்றார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இப்படத்தின் முதல் சிங்கிள் 'விசில் போடு' வெளியாகி 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்த சிங்கிளை விரைவில் வெளியிட வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.