உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா

தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து, அதில் இடம்பெற்ற 'அடியாத்தி' என்கிற பாடலின் மூலம் இன்னும் அதிக அளவில் தமிழ் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகை சம்யுக்தா. அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் ரீமேக்கான போது அந்த படத்தில் நடிகர் ராணாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் நுழைந்தார் சம்யுக்தா. அதன் பிறகு பிம்பிசாரா, வாத்தி, விருபாக்ஷா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது சுயம்பு என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சம்யுக்தா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “தெலுங்கில் நடிப்பதில் எனக்கு மிகமிக சிரமமாக இருப்பது ஓவர் மேக்கப் போட்டுக் கொள்வது தான். மலையாளத்தில் நடிக்கும் போது மேக்கப் போடுவதற்கான வேலையே இருக்காது. இயல்பாக வீட்டில் இருந்து ஆபீஸ் கிளம்பி செல்வதற்கு என்ன மேக்கப் போட்டுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு தான் வேலை இருக்கும். ஆனால் தெலுங்கு படப்பிடிப்பில் மேக்கப் என்பது தனி வேலையாகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார் சம்யுக்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !