உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல்

'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல்

இந்தியத் திரையுலகத்தையே புரட்டிப் போட்ட இரண்டு படங்கள் 'பாகுபலி 2, கேஜிஎப் 2'. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 2' தெலுங்குப் படமும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளிவந்த 'கேஜிஎப் 2' கன்னடப் படமும் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

அப்படங்களின் 3ம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமவுலி பலரும் 3ம் பாகம் பற்றி கேட்கிறார்கள். இரண்டாம் பாகம் வந்த பின்பே மூன்றாம் பாகத்தை உருவாக்க நினைத்திருந்தேன். அப்படி ஒரு எண்ணம் இன்னமும் இருக்கிறது. இது தொடர்பாக பிரபாஸிடம் பேசி வருகிறேன். 3ம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று தெரிவித்தார்.

'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்த 'சலார்' படத்தை இயக்கினார் பிரசாந்த் நீல். அடுத்து 'சலார் 2' படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை இயக்கி முடித்த பின் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். அப்படத்தையும் முடித்த பிறகு 'கேஜிஎப் 3' படத்தை உருவாக்கும் எண்ணம் அவருக்கு இருக்கிறதாம். அப்படத்தில் யஷ், பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் ஆகிய மூவரையும் இணைந்து நடிக்க வைக்கவும் யோசிக்கிறாராம். இப்படி ஒரு தகவல் டோலிவுட் வட்டாரங்களில் கசிந்துள்ளது.

'பாகுபலி 3, கேஜிஎப் 3' படங்கள் நடந்து முடிந்து வெளிவந்தால் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும் என்பது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !