சின்னத்திரை : நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் மரணம்
ADDED : 560 days ago
கன்னட சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம். தெலுங்கு மற்றும் கன்னட மொழி தொடர்களில் நடித்து வருகிறார். தெலுங்கு தொடர் ஒன்றில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் தங்கியுள்ளார் .
நேற்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு தனது குடும்பத்தினருடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. அப்போது பின்னால் வந்த பஸ் மோதியதில் கார் நொறுங்கியது.
சம்பவ இடத்திலேயே பவித்ரா ஜெயராம் மரணம் அடைந்தார். அவருடன் காரில் பயணம் செய்த மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பவித்ரா ஜெயராம் மரணம் தெலுங்கு மற்றும் கன்னட சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.