உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி

நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி மீண்டும் தீவிரமாகி உள்ளது. கடந்தமுறை நாசர் தலைமையிலான அணியினர் பொறுப்பேற்ற பிறகு இந்த பணிக்கான பூஜைகள் நடந்து அதன்பின் பணிகள் மும்முரமாய் நடந்து வந்தன. பின்னர் ஏற்பட்ட நிதி தட்டுப்பாடு, நடிகர் சங்க தேர்தல் வழக்கு போன்ற பிரச்னையால் பணிகள் நின்று போகின. மீண்டும் நாசர் அணியினர் பொறுப்பேற்ற பின்னர் இந்த பணி தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளன.

சங்க கட்டடம் கட்ட கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி நிதி வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் நிதி வழங்கினார். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார். இதற்காக தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் தனுஷிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !