புதுமுகங்களின் 'குற்றம் புதிது'
ADDED : 508 days ago
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் 'குற்றம் புதிது'. அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். புதுமுகம் செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மற்றும் மதுசூதன ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன் ,பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் கிருபா இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. கே.பாக்யராஜ் தொடங்கி வைத்தார். வருகிற 23ம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பை ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பேண்டசி கலந்த புதுமையான திரைக்கதையில் கிரைம் திரில்லர் ஜார்னரில் படம் தயாராகிறது.