திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு
ADDED : 552 days ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஜவான் படம் மூலம் ஹிந்தியிலும் வெற்றி நாயகியாக உயர்ந்தார். தற்போது தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோ, வீடியோவை தொடர்ந்து ரீல்ஸாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து கன்னியாகுமரியில் உள்ள பல கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார். குறிப்பாக சுசீந்திரம் தாணுமாலயசாமி, நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில், குமரி பகவதி அம்மன் கோயில், விஸ்வரூப ஆஞ்சநேய கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மேலும் தூத்துக்குடி அய்யா வைகுண்டசாமி கோயிலிலும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று(மே 14) காலை திருச்செந்தூர் கோயிலிலும் சென்று சாமி தரிசனம் செய்தார்.