மகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' படப்பிடிப்பு
ADDED : 571 days ago
விஜய் கார்த்திகேயா இயக்கத்தில், கிச்சா சுதீப், வரலட்சுமி, சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கும் கன்னடப் படம் 'மேக்ஸ்'. இப்படத்தைத் தமிழ் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
கடந்த பத்து மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் தற்போது முடிவடைந்துள்ளது. இது குறித்து வீடியோ பதிவு ஒன்றுடன் படப்பிடிப்பு முடிந்தது பற்றி சுதீப் பதிவிட்டுள்ளார்.
“மகாபலிபுரத்தில் 'மேக்ஸ்' படப்பிடிப்பு முடிவடைந்தது. 10 மாதங்கள் நீண்ட பயணம் இது, அதன் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தேன். செட்டில் அற்புதமான குழுவினர் அன்பான நடிகர்கள் இருந்தனர். என்னை சிறப்பாக நடத்தியதற்கு நன்றி தாணு சார். விஜய் மற்றும் மொத்த குழுவினருக்கும் ஒட்டு மொத்த நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.