அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா
ADDED : 520 days ago
இயக்குனர் விக்ரமனின் மகனான விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. சூர்யா, விஜய் ஆகியோரை சந்தித்து படக்குழுவினர் வாழ்த்துகளைப் பெற்றனர். அடுத்து ரஜினிகாந்தையும் சந்தித்தனர். விஜய் கனிஷ்கா மற்றும் படக்குழுவினருக்கு ரஜினி தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ரஜினியை சந்தித்த பின் சிறு வயதில் அவருடன் எடுத்த புகைப்படத்தையும், தற்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் கனிஷ்கா.
“24 வருட சேலஞ்ச். எங்களை ஒவ்வொரு நாளும் உத்வேகப்படுத்துவதற்கும் உங்களது 'ஹிட் லிஸ்ட்' குழுவினரை வாழ்த்தியதற்கும் நன்றி சார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.