உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா

சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா

நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா 3.5 கோடி மதிப்புள்ள 'போர்ஷே' கார் ஒன்றை சென்னையில் வாங்கியுள்ளார். 911 ஜிடி3 ஆர்எஸ் என்ற மாடல் கார் அது. சென்னையில் வாங்கிய பின் அக்காரை ஹைதராபாத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

நாகசைதன்யாவிடம் ஏற்கெனவே சில விலையுயர்ந்த கார்கள் இருக்கிறது. 3.8 கோடி மதிப்புள்ள பெராரி கார், 1.3 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார், 1.1 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் கார், 2.1 கோடி மதிப்புள்ள நிசான் கார், 2.2 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், 35 லட்சம் மதிப்புள்ள அகஸ்டா, 18 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஆகிய இத்தனை கார்களை வைத்துள்ளார் நாக சைதன்யா.

சினிமா பிரபலங்கள் பலருக்கும் இப்படி விதவிதமான கார்களை வைத்திருப்பது ஒரு பொழுதுபோக்கு. இதற்கு முன்பு நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா வைத்திருக்கும் கார்கள் பற்றியும், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் வைத்திருக்கும் கார்கள் பற்றியும் செய்திகள் வந்தன.

தெலுங்குத் திரையுலகில் உள்ள பலரும் விதவிதமான கார்களின் சொந்தக்காரர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !