வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் மாஸ்டர்
ADDED : 529 days ago
கடந்த 2021ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவந்த படம் 'மாஸ்டர்'. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பால் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நாடுகளில் மாஸ்டர் படம் வெளியாகவில்லை. தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் பரபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை விரைவில் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் வெளியிடுவதாக ஹம்சினி மற்றும் அகிம்சா விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.