மிஷ்கின் - விஜய்சேதுபதியின் ‛ட்ரெயின்' படப்பிடிப்பு முடிவடைந்தது!
ADDED : 492 days ago
மிஷ்கின்
இயக்கத்தில் உருவான பிசாசு -2 படம் ரிலீசுக்கு தயாரானபோதும் பல மாதங்கள்
கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் சேதுபதி நடிப்பில்
‛ட்ரெயின்' என்ற படத்தை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கினார்.
இப்படத்திற்காக ரயில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த
நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப்
பணிகள் தொடங்கி உள்ளது.
அதோடு, பிசாசு-2 படத்திற்கு முன்பே இந்த
ட்ரெயின் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் மிஷ்கின். எஸ்.தானு
தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் வினய் ராய், பாவனா, நாசர்,
கே. எஸ். ரவிக்குமார், கனிகா, சிங்கபுலி, பப்லு உள்ளிட்ட பலர் முக்கிய
வேடங்களில் நடிக்க இயக்குனர் மிஷ்கினே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார்.