42 கிலோ எடையை தூக்கிய நடிகை சமந்தா!
ADDED : 537 days ago
மயோசிட்டிஸ் என்ற தோல் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, சில ஆண்டுகளாக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டிருந்தவர், தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். மேலும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வரும் சமந்தா, புதிய படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் தனது உடல் கட்டை பராமரிப்பதில் தீவிரம் காட்டி வரும் சமந்தா, தொடர்ந்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது ஜிம் டிரைனர் உதவியுடன் 42 கிலோ எடையை தூக்கி பலப்பரீட்சை பார்த்துள்ள வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதையடுத்து 50 கிலோ எடையுள்ள சமந்தா 42 கிலோ வெயிட் தூக்கி சாதனை செய்திருப்பதை அனைவரும் பாராட்டி அவரை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.