அபுதாபி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற சரத்குமார்!
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி அபுதாபியில் சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதையடுத்து சமீபத்தில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அபுதாபிக்கு சென்ற ரஜினிகாந்த் அந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சரத்குமாரும் தனது மனைவி ராதிகா மற்றும் மகனுடன் அபுதாபி நாராயணன் சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், அபுதாபி சுவாமி நாராயணன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்தேன். அமைதி, நல்லிணக்கம் கொண்ட இந்த ஆலயத்துக்கு நாங்கள் செல்வது இது மூன்றாவது முறையாகும். இந்த முறை மே 28ம் தேதி சென்றிருந்தோம். அங்கு காணப்பட்ட காட்சிகள் ஏற்பட்ட ஆன்மிக உணர்வுகள் அமைதியை தருகின்றன. அங்குள்ள சுவாமிஜியிடம் ஆசி பெற்று தெய்வீக தரிசனம் பெற்றோம் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் சரத்குமார்.