ஷாலினி அஜித் பெயரில் போலி எக்ஸ் தளம்
ADDED : 586 days ago
நடிகர் அஜித்குமாரின் மனைவியான ஷாலினி அஜித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக தொடர்ந்து தனது குடும்பத்தினர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது அவரது அதிகாரப்பூர்வமான பக்கம் என்பதால் பெருவாரியாக அஜித் ரசிகர்களும் அவரை பின் தொடருகிறார்கள்.
இந்த நிலையில் ஷாலினி அஜித்தின் பெயரில் எக்ஸ் தளத்தில் யாரோ மர்ம நபர் ஒரு போலி கணக்கு தொடங்கி இருக்கிறார். இதை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். இதுகுறித்த தகவல் தனக்கு தெரிய வந்ததை அடுத்து ஒரு அலர்ட் செய்தி வெளியிட்டிருக்கிறார் ஷாலினி. அதில், எக்ஸ் தளத்தில் என்னுடைய பெயரில் ஒரு போலி கணக்கு உள்ளது. அதனால் அது என்னுடைய அக்கவுண்ட் என்று நினைத்து யாரும் பின் தொடர வேண்டாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார் .