ஜூலையில் வெளியாகும் கொட்டேஷன் கேங்க்
ADDED : 510 days ago
விவேக் குமார் கண்ணன் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள கேங்ஸ்டர் படம் கொட்டேஷன் கேங்க். இப்படத்தில் ஜாக்கி ஷெராப், ப்ரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். டிரம்மர் சிவமணி இசை அமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் இப்படம் குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் சன்னி லியோன். அதில், இந்த கொட்டேஷன் கேங்க் படம் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.