சித்தார்த் நடிக்கும் காதல் கதை “மிஸ் யூ”
ADDED : 499 days ago
செவன் மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ, சித்தார்த் நாயகனாக நடிக்கும் ‛மிஸ் யூ' படத்தை தயாரிக்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். 'மாப்ள சிங்கம்', 'களத்தில் சந்திப்போம்' போன்ற படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.
பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.