உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அரண்மனை 4' வெற்றியைப் பார்த்து 'காஞ்சனா 4'!!

'அரண்மனை 4' வெற்றியைப் பார்த்து 'காஞ்சனா 4'!!


தமிழ் சினிமாவில் பேய்ப் படங்களின் வருகையை ஆரம்பித்து வைத்த படம் என்றால் 2007ம் ஆண்டில் வந்த 'முனி' படம்தான். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ராஜ்கிரண், ராகவா லாரன்ஸ், வேதிகா மற்றும் பலர் நடித்தனர். இப்படம் பெரிய வெற்றியைக் குவித்தது.

அதற்கடுத்து அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கும் போது அதற்கு 'காஞ்சனா' எனப் பெயர் வைத்தார் ராகவா லாரன்ஸ். அதன்பின் குழந்தைகள் கூட 'காஞ்சனா பேய்' என அழைக்க ஆரம்பித்ததால் அதற்கடுத்த பாகங்களும் காஞ்சனா 2, காஞ்சனா 3 என்ற பெயரிலேயே வெளிவந்தது.

'முனி' என்ற முதல் பாகத்தின் தொடர்ச்சி என்று பார்த்தால் 'முனி' 4ம் பாகமாக 'காஞ்சனா 3' படம் 2019ல் வெளிவந்தது. இப்போது 'காஞ்சனா 4'ம் பாகத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய நடித்து வெளிவந்த 'அரண்மனை 4' படம் வெற்றி பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனால்தான் 'காஞ்சனா 4' படத்தையும் தைரியமாக எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

2025ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !