மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
480 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
480 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
480 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன். இந்நிறுவனத்தின் உரிமையாளராக கேஇ ஞானவேல்ராஜா இருந்தாலும், முக்கிய பொறுப்பில் இருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
இந்த நிறுவனம் தற்போது விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்', சூர்யா நடித்துள்ள 'கங்குவா' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் இந்த தினங்களில் வெளியாகும் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.
இதனிடையே, தயாரிப்பாளர் தனஞ்செயன் அது குறித்து கோபமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “கங்குவா, தங்கலான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்து, என்னை 'டேக்' செய்து நிறைய பதிவுகள், கிண்டல்கள் ஆகியவற்றைப் பார்க்கிறேன். நண்பர்களே கூலாக இருங்கள். உங்கள் உற்சாகத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், பல நூறு கோடிகளை முதலீடு செய்த ஒரு தயாரிப்பாளருக்கு தனது படங்களை எப்போது வெளியிடுவது, வருவாயை அதிகப்படுத்துவது மற்றும் அபாயத்தைக் குறைப்பது என்பது தெரியும்.
சிலரை மகிழ்விப்பதற்காகவும், பிறகு கஷ்டப்படுவதற்காகவும் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க முடியாது. இது பொருளாதாரம் மற்றும் நல்ல தேதிக்கான வாய்ப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். எனவே, தயவு செய்து அறிவுரை கூறுவதையும், விமர்சிப்பதையும், கருத்து தெரிவிப்பதையும் நிறுத்துங்கள். நாங்கள் அறிவிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்கவும். அதுவரை தேவயற்ற கிண்டல்களில் ஈடுபடுவதை தவிர்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும்,” என்று பதிவிட்டுள்ளார்.
அவர் இப்படி பதிவிட்டும் கூட அதில் கிண்டல் செய்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர் சில ரசிகர்கள்.
480 days ago
480 days ago
480 days ago