சீரியல் நடிகை ஸ்ரீகோபிகா நாயருக்கு நிச்சயதார்த்தம்
ADDED : 488 days ago
மலையாள நடிகையான ஸ்ரீகோபிகா நாயர் தமிழ் சின்னத்திரையில் அன்பே வா, சுந்தரி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது இரண்டு சீரியல்களும் முடிந்துவிட்ட நிலையில் மலையாள தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு தற்போது வைசாக் ரவி என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. ஸ்ரீகோபிகா நாயர் வைசாக் ரவியை 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதன்புகைப்படங்களை ஸ்ரீகோபிகா தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.