டிரெண்டிங் பாடலுக்கு ரஷ்மிகாவை போல் நடனமாடிய எதிர்நீச்சல் ஜனனி
ADDED : 488 days ago
எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை மதுமிதா. தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழில் இவர் மீண்டும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா தற்போது புஷ்பா 2 படத்தில் வரும் டிரெண்டிங் பாடலுக்கு தனது தோழருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அந்த வீடியோவானது தற்போது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.