உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டபுள் ஐ ஸ்மார்ட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'டபுள் ஐ ஸ்மார்ட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடங்கினர்.

இந்த நிலையில் இப்போது இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !