சிவகார்த்திகேயன் 23வது படத்தில் இணைந்த டான்சிங் ரோஸ் சபீர்
ADDED : 570 days ago
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 23வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வரும் நிலையில், வில்லனாக வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், சஞ்சய், விக்ராந்த் ஆகியோர் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்படுள்ளது. தற்போது சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, தி ரோடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள டான்சிங் ரோஸ் சபீர் நடிப்பதாகவும் இப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.