கருடன் ரூ.50 கோடி வசூல்
ADDED : 518 days ago
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு படத்திலிருந்து கவனிக்கப்படும் காமெடியனாக வலம் வந்த நடிகர் சூரி, ‛விடுதலை' படத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கருடன் படம் கடந்த 31ஆம் தேதி திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்திய அளவில் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடித்து 50 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சூரியின் ஹீரோ மார்க்கெட்டில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.