ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர்
ADDED : 484 days ago
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‛இந்தியன்-2' படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜூலை 12ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
படம் வெளியாக இன்னும் ஏறக்குறைய 20 நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழு தீவிரமான புரமோஷனில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் 25ம் தேதி (நாளை மறுநாள்) படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.