குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாட்டல் ராதா'
ADDED : 466 days ago
மதுவை அடிப்படையாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளது. கடைசியாக 'கிளாஸ்மேட்' படம் வெளிவந்தது. தற்போது தயாராகி வரும் படம் 'பாட்டல் ராதா'. தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவர் தவிர சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், அந்தோணி உள்பட பலர் நடிக்கிறார்கள். தினகரன் சிவலிங்கம் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ரூபேஸ் ஷாஜி ஒளிப்பதிவு செய்கிறார், மதுவின் கொடுமைகளை காமெடியாக சொல்லும் படமாக உருவாகிறது.