கங்கனாவின் எமர்ஜென்சி செப்., 6ல் ரிலீஸ்
ADDED : 485 days ago
தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி- 2 போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தற்போது தான் இயக்கி நடித்திருக்கும் எமர்ஜென்சி என்ற படத்தை செப்டம்பர் 6ம் தேதி வெளியிட இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே மணிகர்னிகா என்ற படத்தை இயக்கி நடித்த கங்கனா, இந்த படத்தை முன்னாள் பிரதமர் இந்திராவின் ஆட்சி காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாகக் கொண்ட கதையில் இயக்கி, நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தபடம் வெளியாகும் முதல் நாளில் தான் அதாவது செப்., 5ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் கோட் படம் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.