பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியாவை சந்தித்த நயன்தாரா
ADDED : 466 days ago
2013ம் ஆண்டு அட்லி இயக்கிய முதல் படம் ராஜா ராணி . இந்த படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்த படத்தில் நயன்தாரா, நஸ்ரியா இருவருக்கும் காம்பினேஷன் சீன்களே கிடையாது என்ற போதிலும் கேரளாவைச் சார்ந்தவர்களான அவர்கள் அந்த படத்தில் இருந்தே நெருங்கிய தோழிகளாகி விட்டார்கள். அதோடு ராஜா ராணிக்கு பிறகு சில படங்களில் நடித்த நஸ்ரியா பின்னர் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட நிலையில், நயன்தாராவோ விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன், பஹத் பாசில் - நஸ்ரியா ஜோடி சந்தித்துள்ளார்கள். இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளார்.