லாரன்ஸிற்கு வில்லனாக பஹத் பாசில், எஸ்.ஜே.சூர்யா
ADDED : 495 days ago
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரிக்கிறார். சமீபத்தில் தனது தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் 'பென்ஸ்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். தற்போது இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது இதில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா மற்றும் பஹத் பாசில் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இவர்கள் இருவருமே லாரன்ஸிற்கு வில்லனாக நடிக்க உள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.