மாஸ்க் படத்தில் கவினுக்கு ஜோடியாகும் ருஹானி சர்மா
ADDED : 475 days ago
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் மாஸ்க். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். ஆண்ட்ரியாவை தொடர்ந்து இன்னொரு நாயகி வேடத்தில் நடிக்க ருஹானி சர்மா என்பவரும் தற்போது கமிட்டாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் 2017ம் ஆண்டு வெளியான கடைசி பெஞ்ச் கார்த்திக் என்ற படத்தில் நடித்தவர். பாலிவுட் நடிகையான இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவின் நெருங்கிய உறவினர் ஆவார். தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் மாஸ்க் படத்தில் கமிட்டான தகவல் விரைவில் வெளியாக உள்ளது.