உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சரிகமப நிகழ்ச்சியில் ரசிகர்களை நெகிழச் செய்த ஆட்டோக்காரர்!

சரிகமப நிகழ்ச்சியில் ரசிகர்களை நெகிழச் செய்த ஆட்டோக்காரர்!

சின்னத்திரையில் சீரியல்களுக்கு இணையாக ரியாலிட்டி ஷோக்களிலும் செடின்மென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து டிஆர்பியை அள்ளி வருகின்றன தொலைக்காட்சிகள். மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஜீ தமிழ் நிகழ்ச்சியான சரிகமப நிகழ்ச்சியில் சென்ற வாரம் தந்தை - மகள் பாசப்போராட்டம் டிரெண்டான நிலையில், இந்த வாரம் தாய் - மகன் பாசப்போராட்டம் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்துள்ள போட்டியாளரான ஆட்டோ ஓட்டுநர் வீரபாண்டி டெடிகேஷன் ரவுண்டில் என்ன பெத்த ஆத்தா என்கிற பாடலை தனது அம்மாவுக்காக பாடி அசத்தினார். அதன்பின் பேசிய அவர், தனது அம்மா தங்களுக்காக ஸ்கூலில் கக்கூஸ் கழுவி ஆயா வேலை பார்த்ததாகவும் இருந்தாலும் தாங்கள் அப்போதெல்லாம் வெகுநாட்கள் பட்டினி கிடந்ததாகவும் மேடையில் கூறினார். மேலும், தனது அம்மா பட்டுப்புடவை கட்டியதே இல்லை என்று கூறிய வீரபாண்டி தன் தாய்க்காக பட்டுப்புடவை வாங்கி கொடுத்தார். இந்த சம்பவத்தை பார்த்து நெகிழ்ந்து போன சைந்தவி, வீரபாண்டியின் அம்மாவை நடுவர்களுக்கு அருகில் அமர செய்து கவுரவப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !