திருமணத்திற்கு பின் மணமகள் சீரியலில் ரீ- என்ட்ரி கொடுத்த திருமகள் நடிகை
ADDED : 475 days ago
கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் திருமகள். இந்த தொடரில் ஹரிகா சாது ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். சக நடிகரான அரவிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடரான மணமகளே வா என்கிற தொடரில் நாயகியாக நடிக்கிறார். இந்த தொடரில் மக்களுக்கு பரிட்சயமான இன்னும் சில பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். இதன் புரோமோ அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் ஹரிகா சாதுவின் ரீ-என்ட்ரியை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.