அப்புகுட்டி படத்தில் கள்ளச்சாராய சாவு
ADDED : 465 days ago
மலையாள இயக்குனர் ரஜூ சந்திரா இயக்கும் தமிழ் படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்'. கதை நாயகனாக அப்புகுட்டி நடிக்கிறார், நாயகியாக ஐஸ்வர்யா அனில் அறிமுகமாகிறார். இவர்கள் தவிர ஸ்ரீஜா ரவியின் ரோஜி மேத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நவநீத் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ரஜூ சந்திரா கூறும்போது, “கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவு பற்றி இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சம்பவத்திற்கு முன்பு நடந்த மரக்காணம் கள்ளச்சாராய சாவை மனதில் வைத்து உருவான படம் இது. கள்ளச்சாராய தொழிலில் யார் யார் ஈடுபடுகிறார்கள். அது அப்பாவி மக்களின் வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. விரைவில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது” என்றார்.