உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் : சுசித்ரா மீது கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் புகார்

தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் : சுசித்ரா மீது கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் புகார்

பின்னணி பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா, நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு சில நடிகர், நடிகைகளின் அந்தரங்க ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2018ம் ஆண்டு கார்த்தி குமாரும், சுசித்ராவும் விவாகரத்து பெற்றனர்.

சில ஆண்டுகள் அமைதியாக இருந்த சுசித்ரா தற்போது பல மீண்டும் பலரைப் பற்றி பரபரப்பு புகார் கூறி வருகிறார். குறிப்பாக தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரின சேர்க்கையாளர், அவரும் ஒரு முன்னணி நடிகரும் அந்த உறவில் இருந்தார்கள் என்று கூறினார்.

இதை தொடர்ந்து சுசித்ராவின் பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் கார்த்திக் குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை சுசித்ரா தெரிவிப்பதாக கார்த்திக் குமார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. தடை ஆணை எங்களுக்கு கிடைக்கவில்லை என்று சுசித்ரா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் மீண்டும் ஆணையை சுசித்ராவுக்கு அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !