உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஜூ முருகனுக்குக் கை கொடுத்த சசிகுமார்

ராஜூ முருகனுக்குக் கை கொடுத்த சசிகுமார்

'குக்கூ' படத்தில் இயக்குனராக அறிமுகமானாலும் 'ஜோக்கர்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர் இயக்குனர் ராஜூ முருகன். அந்தப் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

அதற்குப் பிறகு அவர் இயக்கிய 'ஜிப்ஸி, ஜப்பான்' ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. குறிப்பாக கார்த்தியின் மார்க்கெட்டை அதல பாதாளத்திற்குத் தள்ளியது 'ஜப்பான்'. அதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என அடுத்த படங்களை நம்பியிருக்கிறார் கார்த்தி.

'ஜப்பான்' படத்திற்குப் பிறகு சில ஹீரோக்களிடம் கதை சொல்லியிருக்கிறார் ராஜூ முருகன். ஆனால், யாரும் சரியான பதிலளிக்கவில்லை என்கிறார்கள். இந்நிலையில் சசிகுமார் அவருக்குக் கை கொடுத்திருக்கிறார்.

ராஜூ முருகன் இயக்க சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும்அந்தப் படம் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து வருகிறது. 'ஜிப்ஸி' படத்தைத் தயாரித்த திமுக எம்எல்ஏ அம்பேத் குமார் தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 'ஜிப்ஸி'யில் விட்டதை இதில் மீட்பார்களா என்றுதான் கோலிவுட்டும் எதிர்பார்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !