ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமண சங்கீத் விழா: கவர்ச்சி நடனமாடிய அட்லி - பிரியா அட்லி!
ADDED : 516 days ago
வருகிற ஜூலை 12ம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய சங்கீத் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பல பாலிவுட் திரைபிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது ஒரே மாதிரியான டிசைன் கொண்ட காஸ்டியூம் அணிந்து இருந்த அவர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்களை போன்று தாங்களும் நடனம் ஆடி உள்ளார்கள். அப்போது பிரியா அட்லி கிளாமரான உடையுடன் காணப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.