ரஜினியின் கூலி படத்தில் இணைந்த மாஸ்டர் மகேந்திரன்!
ADDED : 504 days ago
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி உடன் ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா உள்ளிட்ட சிலர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் கடந்த 2021ம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் இணைந்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், அது குறித்த ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த கூலி படத்தில் நடிகர் சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.