35 வயதில் நடிப்புக்கு முழுக்கு! துஷாரா விஜயன் எடுத்த முடிவு
ADDED : 459 days ago
போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். அதன் பிறகு சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது வேட்டையன், ராயன் போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து விக்ரமுடன் ‛வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், எனது 35வது வயதில் சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன். அதன் பிறகு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக உள்ளது. இப்போது எனக்கு 26 வயது ஆகும் நிலையில், அடுத்த 9 ஆண்டுகளுக்குள் நான் நடிக்க நினைக்கும் அத்தனை மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து விடுவேன் என்கிறார் துஷாரா விஜயன்.