உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இந்தியன் 2' குழுவினரைப் பாராட்டிய தெலங்கானா முதல்வர்

'இந்தியன் 2' குழுவினரைப் பாராட்டிய தெலங்கானா முதல்வர்

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது அதற்கான டிக்கெட் கட்டணங்களை அந்தந்த மாநில அரசுகள் உயர்த்திக் கொள்ள அனுமதிக்கும். படத்திற்கேற்றபடி கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள்.

அப்படி டிக்கெட் கட்டண உயர்வு பெறும் படங்களின் கதாநாயகர்கள் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான வீடியோக்களை, கட்டண உயர்வுக்கான விண்ணப்பத்துடன் இணைத்தால் மட்டுமே கட்டண உயர்வை அனுமதிப்போம் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அவரது அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து 'இந்தியன் 2' குழுவினர் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரக்கனி, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் போதைப் பொருள் எதிர்ப்பு வீடியோக்களை வெளியிட்டனர்.

அதற்காக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அவர்களை வாழ்த்தியுள்ளார். முதல்வரின் அறிவிப்புக்குப் பின் இப்படி வீடியோவை வெளியிடும் முதல் படக்குழு 'இந்தியன் 2' என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் 'பாரதீயடு 2' என்ற பெயரில் இப்படம் டப்பிங் ஆகி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !