சவுந்தர்யா ரஜினியின் ‛ஹூட்' செயலியும் மூடல்?
ADDED : 452 days ago
நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா. இயக்குனராக உள்ள இவர் சில ஆண்டுகளுக்கு முன் ‛ஹூட்' (Hoote) என்ற செயலியை துவக்கினார். எக்ஸ் (டுவிட்டர்) தளத்திற்கு நிகராக இந்தியாவில் ‛கூ' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது போன்று சவுந்தர்யாவும் இந்த ‛ஹூட்' செயலியை துவக்கினார்.
கொரோனா காலக்கட்டத்தில் இந்த தளம் துவங்கப்பட்டது. இதற்கு ரஜினியும் ஆதரவு தந்தார். அவர் பேசிய முக்கிய அறிவிப்பு தொடர்பான விஷயங்கள் ஆடியோக்களாக இந்த தளத்தில் வெளியிடப்பட்டன. இதனால் ஆரம்பத்தில் இந்த தளத்திற்கு கொஞ்சம் ஆதரவு இருந்தது. போகப்போக இந்த தளத்திற்கு வரவேற்பு இல்லை. இதனால் ‛ஹூட்' செயலி இப்போது மூடு விழாவை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் துவங்கப்பட்ட ‛கூ' செயலிக்கு வரவேற்பு இல்லாததால் சமீபத்தில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.