கண்மணிக்கு அஸ்வத் கொடுத்த சர்ப்ரைஸ்
ADDED : 453 days ago
சின்னத்திரை பிரபலங்களான சீரியல் நடிகை கண்மணி மனோகரனும், வீஜே அஸ்வத்தும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அவர்களது திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. இந்நிலையில், கண்மணிக்கு ப்ரபோஸ் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அஸ்வத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கண்மணியின் பிறந்தநாளையொட்டி கடற்கரையில் சர்ப்ரைஸ் ஏற்பாடுகள் செய்து, அஸ்வத் தனது காதலை ப்ரபோஸ் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பலரும் இருவரது ஜோடி பொருத்தத்தை பாராட்டி வருகின்றனர்.