உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லியின் அடுத்த படத்தில் விக்ரம் - தனுஷ் நடிக்கிறார்களா?

அட்லியின் அடுத்த படத்தில் விக்ரம் - தனுஷ் நடிக்கிறார்களா?


ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி, அதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. பின்னர் சல்மான்கான் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது அட்லி தனது அடுத்த படத்தை தமிழில் இயக்குவதாகவும், அந்த படத்தில் விக்ரம், தனுஷ், பகத் பாசில் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லியின் புதிய படம் குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளியான நிலையில், தற்போது இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !