மீண்டும் இணையும் சரத்குமார், தேவயானி
ADDED : 460 days ago
1997ம் ஆண்டு வெளியான 'சூர்யவம்சம்' படத்தில் சரத்குமாரும், தேவயானியும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படத்தை விக்ரமன் இயக்கி இருந்தார். படமும் பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு 40வது படமாகும். இதில் நாயகிகளாக மீதா ரகுநாத், சைத்ரா அச்சார் ஆகியோர் நடிக்கின்றனர்.